27 டிச., 2014

உன் ஆற்றல்

என் முதல் பதிவு.....சாக்கு போக்கு சொல்பவன்
             சாதனையாளன் ஆக முடியாது!
பொழுதை வீணடிப்பவன்
              போதனையாளன் ஆக முடியாது!
வாய்ப்புகளுக்காக  காத்திருப்பவனுக்கு
                வாழ்க்கையே இல்லை!
வாய்ப்புகளை உருவாக்குபவனுக்கு
                 வானம் கூட இல்லை - எல்லை!
விழித்தெழு தோழா வீரனாய்!
                 ஒழித்தெழு தோழா உன்னுள் இருக்கும் மூடனை!
அணுவின் ஆற்றலை விட
                 அக்னிச்சிறகுகளின் ஆற்றல் அதிகம்!
பணிவும், துணிவும்
                 உன்னுள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக