14 ஆக., 2017

சுயநல சூறாவளியா? பொதுநல போராளியா?

பசி அறியான் யாருமில்லை
பல சுவை சுவைத்தபின்பும்
நா விரும்பிவிட்டால் பொதுநலம் பொடியாகிறது.
தேவைக்கு அளித்தால் தேவதை
தேவையை தூண்டினால் தீவதை
தீவதையை போக்க வணிகம் செய்தால்?
சுயநல சூறாவளியேதான்
அங்கே படி இங்கே படி என பல படி நாடி தினம் ஓடி
வரும் தாடி ஆனால் வராது வேலை தேடி
நீ போவாய்  நாடி ஆனால் அவன்தருவான் தேடி
தன் சூழலை உணர்ந்து மாறு என்பான் அவன் சூழலை உணராமலே
சட்டமும் கட்டமும் மாறும் ஆனால்  வட்டமல்ல
திட்டத்தை கேட்டு விட்டத்தை விழிப்பதை விட நாட்டத்தை தீட்டலாம்  வாட்டமாவது ஓடும்
தேவைக்கு மட்டும் கொடுத்தால் நல்வணிகம்
தேவையும் அளிப்பும் இயல்பாய் இருத்தல் தேவை
விளம்பரங்கள் அல்ல
போட்டி சிறந்த தரத்திற்கும் விளம்பரத்திற்குமே தேவை
விளம்பரத்திற்கிடையே அல்ல
சுயநலத்தை சூழல் பின்னால் காரணம் காட்டி தோரணம் கொண்டு தோற்கடித்தாலும் பொறுத்துகொள்வர்
சுயநலமாகாது சூழலின் தேவைகள்
போட்டியின்றி வேட்டையாடி கோட்டை கொட்டகையை சொட்டையாக்க நினைப்பவைகளே சுயநல சூறாவளி
சுயநலம் சுயநல சூறாவளியானபோதெல்லாம்
தோன்றியுள்ளார்கள் பொதுநல போராளிகள்!