27 மார்., 2015

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!


பின்வாங்காமையே உன்னை பிரபலபடுத்தும் 
         கௌரவத்துடன் தன்னடக்கம் உன்னை முடுக்கமடைய செய்யும் 
ரசிப்பதில் ஒழுக்கம் இருந்தால் நீ ரசிப்பது உன்னை அடையும் 
          சந்தோசமாக இருக்க நினைத்தால் சிரிக்கவும், சிந்திக்கவும் மறக்காதீர் 
காலம் கண் போன்றது, காத்திருத்தல் இமை போன்றது 
          ல்வாழ்க்கை இளநீர் போன்றது பருக தவறாதீர்கள் 
ஷ்டப்பட்டது நிச்சயம் கிடைக்கும் கஷ்டப்பட்டால் மட்டுமே 
          யாருக்காகவும், எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே, ஒப்பிடாதே 
குறைவான எதிர்மனப்பான்மையே உன்னை நிறைவாக்கும்
          மாவீரன் நீ மட்டுமே என நினை, உன் முன் நிற்கும் சவால்களை                                                                                                                                                         - எதிர்கொள்ள 
ர்  நீ நீயாக இரு நீரைப்போல, எங்கும்  எதிலும் கிடைக்கும் வெற்றி நிச்சயம்! 
           

6 பிப்., 2015

அன்பின் அபூர்வ அணிகலன்
          ஆனந்தம்  தரும் ஆற்றலின்  ஆணிவேர்
இயற்கை இயற்றிய இதயத்தின் இசை
           ஈரம் நிறைந்த  ஈன்றவள்
உதட்டசைத்து உதிரம் கொடுத்து உலகறிவை தந்தவள்
           ஊக்கம் ஊட்டி ஊசலாடிய  உள்ளத்தை  வைத்தவள்
எண்ணம் எங்கும் எக்காலத்தும் எடுத்தான்றவள்
           ஏட்டு ஏணியில் ஏறிய பின்பும் ஏழையாய்  உணரவைத்தவள்
ஐந்திணைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும் ஐயமளிப்பவள்
           ஒருமுறை இறந்தாலும், தினம் தினம்  இரக்க  வைப்பவள் - அன்பிற்காக!
ஓசையால் ஓதி ஓராயிரம் வார்த்தைகளை
           ஓராயிரம் நாட்கள் அறிமுகபடுத்தியவள்
ஒளவையின் அறக்கருத்துகளையும் அதியமானின் கொடையையும் கூறி
           அஃது  அப்படியே வாழ அறிவுரை பகர்ந்த ஆசான்!.......

                                                                          அம்மா