6 பிப்., 2015

அன்பின் அபூர்வ அணிகலன்
          ஆனந்தம்  தரும் ஆற்றலின்  ஆணிவேர்
இயற்கை இயற்றிய இதயத்தின் இசை
           ஈரம் நிறைந்த  ஈன்றவள்
உதட்டசைத்து உதிரம் கொடுத்து உலகறிவை தந்தவள்
           ஊக்கம் ஊட்டி ஊசலாடிய  உள்ளத்தை  வைத்தவள்
எண்ணம் எங்கும் எக்காலத்தும் எடுத்தான்றவள்
           ஏட்டு ஏணியில் ஏறிய பின்பும் ஏழையாய்  உணரவைத்தவள்
ஐந்திணைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும் ஐயமளிப்பவள்
           ஒருமுறை இறந்தாலும், தினம் தினம்  இரக்க  வைப்பவள் - அன்பிற்காக!
ஓசையால் ஓதி ஓராயிரம் வார்த்தைகளை
           ஓராயிரம் நாட்கள் அறிமுகபடுத்தியவள்
ஒளவையின் அறக்கருத்துகளையும் அதியமானின் கொடையையும் கூறி
           அஃது  அப்படியே வாழ அறிவுரை பகர்ந்த ஆசான்!.......

                                                                          அம்மா 

27 டிச., 2014

உன் ஆற்றல்

என் முதல் பதிவு.....



சாக்கு போக்கு சொல்பவன்
             சாதனையாளன் ஆக முடியாது!
பொழுதை வீணடிப்பவன்
              போதனையாளன் ஆக முடியாது!
வாய்ப்புகளுக்காக  காத்திருப்பவனுக்கு
                வாழ்க்கையே இல்லை!
வாய்ப்புகளை உருவாக்குபவனுக்கு
                 வானம் கூட இல்லை - எல்லை!
விழித்தெழு தோழா வீரனாய்!
                 ஒழித்தெழு தோழா உன்னுள் இருக்கும் மூடனை!
அணுவின் ஆற்றலை விட
                 அக்னிச்சிறகுகளின் ஆற்றல் அதிகம்!
பணிவும், துணிவும்
                 உன்னுள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும்!